சென்னை இலக்கியத் திருவிழா 2023


08.01.2023 அன்று சென்னை இலக்கியத் திருவிழாவில் தமிழ்க் கவிதைகளில் ஆண்மையப் பார்வை என்கிற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேச அழைக்கப் பட்டிருந்தேன். ஆண்மைய நிலவுடமை சமூகத்தில் படைப்பிலக்கியத்தில் ஆண்மையப் பார்வை நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. என் உரையின் இணைப்பை இங்கு இணைத்துள்ளேன். அண்ணா நூற்றாண்டு நூலக வலைத்தளத்தில் பகிரப் பட்ட காணொளி இது. பள்ளிக் கல்வித் துறைக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத் துறைக்கும் நன்றிகள்

One thought on “சென்னை இலக்கியத் திருவிழா 2023

  1. peruveliblog@gmail.com
    நிகழ்ச்சியைக் காணொளியில் பார்த்த பத்திரிகையாளர் தோழர் கூத்தலிங்கம் அவர்களின் கருத்துப் பகிர்வை இங்கு இணைத்திருக்கிறேன்
    √√√ √√√ √√√

    உங்களின் சென்னை இலக்கியத் திருவிழா உரையை இப்பொழுதுதான் கேட்டேன்.

    ஐம்பது ஆண்டு கவிதை களில் பெண்ணியம்- தாசி அம்மச்சி , மீனாட்சி, ஹெச். சி.ரசூல், ந.முத்துக்குமார் , வெய்யில் மற்றும் விஜயலட்சுமி- கவிதைகள் போக்கு குறித்த உங்கள் உரையில் நிறைய தகவல்கள்.

    பெண்ணிய எதிர்கவிதைகள் குறித்து கூட-பாரதிதாசன்-பேசியிருக்கிறீர்கள்.

    தெளிவான, அழகான மற்றும் புரிந்து கொள்ள ஏதுவான உரை.

    வாழ்த்துக்கள்!🍋

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.