இயற்பெயர் விஜயலட்சுமி. பொன்னி என்னும் புனைப்பெயரில் 2006 வரை எழுதினேன்.பின்னர் ச.விசயலட்சுமி என்னும் பெயரில் எழுதி வருகிறேன்.
சென்னையில் அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். பிறந்தது சென்னை சிந்தாதிரிப் பேட்டை, வளர்ந்தது சென்னையின் புறநகர்ப்பகுதியில் .
தமிழில் முனைவர் பட்டமும் இளங்கல்வியியல் பட்டமும் பயின்றேன். இலக்கியம் நான் இளைப்பாறும் இடம்.
என் எழுத்துகளைப் பகிர்ந்து கொள்ள இந்த வலைத்தளம்..